தி கோட்: விஜய் குரலில் 2-வது பாடல் வெளியானது @vp_offl
சினிமா

தி கோட்: விஜய் குரலில் 2-வது பாடல் வெளியானது

யோகேஷ் குமார்

விஜய் குரலில் கோட் படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது. இசை- யுவன் சங்கர் ராஜா.

விஜய் குரலில் ‘விசில் போடு’ என்ற பாடல் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

சின்ன சின்ன கண்கள் என்ற இந்தப் பாடலையும் விஜய் தான் பாடியுள்ளார். பாடல் வரிகள் - கபிலன் வைரமுத்து.

இப்பாடலில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியது.