விஜய் நடிக்கும் 'கோட்' செப். 5-ல் வெளியீடு! @actorvijay
சினிமா

விஜய் நடிக்கும் 'கோட்' செப்டம்பர் 5-ல் வெளியீடு!

இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடிக்கிறார்கள்.

யோகேஷ் குமார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கோட்' செப்டம்பர் 5 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில்’ பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் 'கோட்' செப்டம்பர் 5 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், கேரளாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷிய தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்று வருவதாகவும், இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.