சினிமா

‘கோட்’ ஹிந்தி வசூல் எவ்வளவு?

ஓடிடி விதிமுறைகள் சிக்கலால் இப்படம் திட்டமிட்டப்படி ஹிந்தியில் செப். 5 அன்று வெளியாகவில்லை.

யோகேஷ் குமார்

கோட் படத்தின் ஹிந்தி வெர்ஷன் முதல் 6 நாள்களில் ரூ. 16.55 கோடி வசூல் செய்துள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் படம் செப். 5 அன்று வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இதுவரை உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கோட் படம் செப். 5 அன்று வெளியானது. ஆனால், ஓடிடி விதிமுறைகள் சிக்கலால் இப்படம் திட்டமிட்டப்படி ஹிந்தியில் செப். 5 அன்று வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து இப்படம் அடுத்த நாளில் வெளியானது.

இந்நிலையில் கோட் படம் ஹிந்தியில் முதல் 6 நாள்களில் ரூ. 16.55 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் ரூ. 3.40 கோடியும், 3-வது நாளில் ரூ. 3.72 கோடியும், அதிகபட்சமாக 4-வது நாளில் ரூ. 4.09 கோடியும் வசூல் செய்துள்ளது.