ஆஸ்கர் நூலகத்தில் தனுஷின் ‘ராயன்’ திரைக்கதை! @sunpictures
சினிமா

ஆஸ்கர் நூலகத்தில் தனுஷின் ‘ராயன்’ திரைக்கதை!

யோகேஷ் குமார்

தனுஷின் 50-வது படமான ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்துக்குத் தேர்வாகியுள்ளது.

தனுஷ் இயக்கத்தில் கடந்த 2017-ல் வெளியான ‘பவர் பாண்டி’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் இயக்கிய 2-வது படம் ‘ராயன்’.

கடந்த ஜூலை 26 அன்று வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நடிப்பில் அசுரன் என்பதை மீண்டும் நிரூபித்த தனுஷ், ஓர் இயக்குநராக கலவையான விமர்சனங்களையே பெற்றார். இருப்பினும், வசூலில் ராயன் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்துக்குத் தேர்வாகியுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படத்தின் திரைக்கதையும் ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் வைக்கப்பட்டது.