‘கேம் சேஞ்சர்’ @shankarshanmugh
சினிமா

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’: வெளியீட்டு தேதியை அறிவித்த தில் ராஜூ!

முன்னதாக, இப்படம் அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

யோகேஷ் குமார்

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படம் கிறிஸ்துமஸில் வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, ஜெயராம், ஸ்ரீ காந்த், சமுத்திரக்கனி, நாசர் உட்பட பலரும் நடிக்கும் படம் ‘கேம் சேஞ்சர்’.

இசை - தமன். கதை - கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தை தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இப்படம் மூலம் ஷங்கர் நேரடியாக முதல் தெலுங்கு படத்தை இயக்குகிறார். இப்படம் அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் வேலைகள் முடியாத காரணத்தால் வெளியீட்டு தேதி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனுஷின் ‘ராயன்’ படத்தின் தெலுங்கு வெளியீடு தொடர்பான ஒரு நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூவிடம் கேம் சேஞ்சரின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் கேட்க ‘கிறிஸ்துமஸில் சந்திக்கலாம்’ என்றார்.