வணங்கான், அருண் விஜய் @arunvijayno1
சினிமா

பூஜையுடன் தொடங்கிய வணங்கான் டப்பிங் பணிகள்

யோகேஷ் குமார்

தமிழ்த் திரையுலகின் சிறந்த இயக்குநரான பாலா இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இந்தப் படத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் போன்றோர் நடித்துள்ளார்கள். இன்று இப்படத்திற்கான டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளன. 

 படத்தைப் பற்றிய வேறு எந்த தகவல்களையும் படக் குழுவினர் வெளியிடாத நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் பார்வை வெளிவந்தது.

கடந்த ஆண்டு இதே படத்தில் சூர்யா, 2டி தயாரிப்பில் நடிக்க ஆரம்பித்த நிலையில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இப்படத்திலிருந்து சூர்யா விலகினார்.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதால் வெளியீட்டுத் தேதி விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.