கோப்புப்படம் 
சினிமா

ஃபஹத் ஃபாசிலுடன் கை கோக்கும் 96 பிரேம் குமார்: கிரைம் திரில்லர் படம் என்று தகவல் | Premkumar | Fahadh Faasil |

ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக நேர்காணலில் தகவல்...

கிழக்கு நியூஸ்

இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் பஹத் பாசிலுடன் கைகோக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 96 மற்றும் மெய்யழகன் படங்கள் மூலம் புகழடைந்தவர் இயக்குநர் பிரேம்குமார். அவர் அண்மையில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத்தின் யூடியூப் சேனலின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பிரேம்குமாரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த கேள்வியை கோபிநாத் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர்,

“அடுத்து வரும் படங்கள் கதைக்களங்களும் பாணிகளும் வெவ்வேறானவை. இதற்கு முன்பு வந்திருக்கும் படங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை. ஆனால் ரசிகர்களை நேரடியாகத் தொடும் உணர்வுப்பூர்வமான தன்மை அமைந்திருக்கும். விக்ரமை வைத்து எடுக்கப்பட இருந்த கதையை இன்னும் எழுதி முடிக்கவில்லை. அதற்கு 4 மாத காலத்தையாவது ஒதுக்க வேண்டும்.

இப்போது மலையாள நடிகர் பஹத் பாசிலை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளேன். அது கிரைம் திரில்லர் கதையாக உள்ளது. அவரிடம் 45 நிமிடங்கள்தான் கதை சொன்னேன். அதிலேயே அவருக்கு கதை பிடித்துவிட்டது. அடுத்த ஆண்டு ஜனவரியில் அநேகமாக படப்பிடிப்பு தொடங்கலாம். படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. மென்மையான இயக்குநராக மட்டுமே பெயரெடுத்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்” இவ்வாறு கூறினார்.

Premkumar | 96 | Meiyazhagan | Fahadh Faasil | Chiyan Vikram | Gopinath |