@dhanushkraja
சினிமா

தனுஷின் இட்லி கடை: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை நித்யா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கின்றனர்.

யோகேஷ் குமார்

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்களைத் தொடர்ந்து, அவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும், இட்லி கடை படமும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை நித்யா, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடிக்கின்றனர்.