தனுஷ் நடித்து இயக்கியுள்ள அடுத்த படம் இட்லி கடை. டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், சமுத்திரகனி, பார்த்திபன், நித்யா மெனென் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 14 அன்று நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோவையில் செப்டம்பர் 20 அன்று நடைபெற்றது. தனுஷ் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதாவது:
"இவ்வளவு பேரு இப்படி திரண்டு வந்து உங்களோட அன்பையும் ஆதரவையும் எனக்குக் கொடுக்கும்போது இன்னும் உண்மையா உங்களுக்காக உழைக்கணும் என்கிற உணர்வு வருது.
உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் உண்மையா உழைக்கணும் என்கிற உணர்வு ஏற்கனவே இருந்தாலும் இப்போ இவ்வளவு பேரை பார்க்கும்போது இன்னும் அது ஆழமா எனக்குத் தோணுது. எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. எவ்வளவு நேரமா இங்க காத்துட்டு இருக்கீங்கன்னு தெரியல. என்னுடைய ஆள் மனசுல இருந்து உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
இதுக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சிக்காக கோயம்புத்தூருக்கு வந்து ஒரு ஒன்பது பத்து வருஷம் இருக்கும் நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் இப்பதான் வரேன். காதல் கொண்டேன் படத்தில்நடிக்கும்போது நிச்சயமா இந்த இடத்துல ஒரு நாள் நான் இப்படி நிப்பேன், இவ்வளவு பேரு எனக்காக வந்திருப்பீங்கன்னு நான் நினைச்சு பார்த்தது கூட கிடையாது. ரொம்ப நெகிழ்வா இருக்கு.
ட்ரைலர் புடிச்சதா உங்களுக்கெல்லாம்? ஒரு படம் நடிக்கும்போது உங்களுக்குப் பிடிக்கணும் அப்படிங்கிற நினைப்புல மட்டுமே ஒரு மொத்த யூனிட்டுமே இயங்கும். ஒரு படம் இயக்கும் போது அந்த உணர்வு இன்னும் ஒரு 100 மடங்கு அதிகமா இருக்கும். அந்த பொறுப்பு இன்னும் 100 மடங்கு அதிகமா இருக்கும். எப்படியாவது உங்கள வந்து சேரணும். உங்களுக்கு அதெல்லாம் பிடிக்கணும்ங்கிற ஒரு எண்ணத்தை தவிர வேற எந்த எண்ணமுமே கிடையாது. அதுக்காக என்கூட நிறைய கஷ்டப்பட்டாங்க. என்னோட மொத்த படக்குழு, தொழில்நுட்பக் குழுவினர் எல்லாருமே பயங்கரமா கடின உழைப்பைச் செலுத்தியிருக்காங்க
அவங்க எல்லாருக்கும் உங்க முன்னாடி நான் என்னுடைய நன்றியை சொல்லிக்கிறேன். என்னுடைய சீனியர் ஆக்டர்ஸ் அவங்க. சத்யராஜ் சார், பார்த்திபன் சார், ராஜ்கிரண் சார், சமுத்திரகனி சார் இவங்க எல்லாம் சீனியர்ஸா இருந்தபோது கூட என்னுடைய பார்வையைப் புரிஞ்சுக்கிட்டு, சார் இது இப்படி வேணும் அப்படி வேணும்னு சொன்னாலும்... சத்யராஜ் சார் சொன்ன மாதிரி கொஞ்சம் நான் மைக்ரோ மேனேஜ் பண்ணுவேன்தான். அப்படி சொல்லும்போது கூட கொஞ்சம் கூட யாருமே முகம் சுழிக்காம அதைப் புரிஞ்சுகிட்டு எனக்காக நடிச்சு கொடுத்தாங்க. அதுக்கு ரொம்ப கடமைப்பட்டுருக்கேன் சார். ரொம்ப நன்றி பார்த்திபன் சார். சத்யராஜ் சார் ரொம்ப நன்றி. இன்னும் நிறைய பேர் இந்த படத்துக்காக நிறைய உழைச்சிருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றி.
அது என்னன்னு தெரியல. நான் வந்து சமைக்கணும்னு தான் எனக்கு ஆசை. செஃப் ஆகணும்னுதான் எனக்கு ஆசை. அந்த ஆசை இருந்ததுனாலயோ என்னவோ தொடர்ந்து நமக்கு சமைக்கிற மாதிரியே படங்கள் அமைஞ்சுகிட்டே இருக்கு. இப்ப ஜெகமே தந்திரம்ல புரோட்டா போட்டோம். திருச்சிற்றம்பலமில் வந்து டெலிவரி பாயா இருந்தோம். ராயன்ல பாஸ்ட் புட் வச்சிருந்தோம். இந்த படத்துல இட்லி சுட்டுக்கிட்டு இருக்கோம். எனக்கு நான் எழுதிக்கிறதும் அந்த மாதிரிதான் இருக்கு. வேற டைரக்டர்ஸ் அப்ரோச் பண்ணும்போதும் அந்த மாதிரி. அது தான் மேனிபெஸ்டேஷன். அதாவது நம்ம என்ன நினைக்கிறோமோ அதுவா நம்ம மாறறோம். எண்ணம் போல் வாழ்க்கை அப்படின்னு சொல்றேன் இல்லையா. மேனிபெஸ்டேஷனோட பவர் அப்படிங்கறது என்னவோ அது நான் நடிகனான பிறகும் கூட அது என்ன தொடர்ந்துகிட்டே இருக்கு.
இளைஞர்கள் வந்து நிச்சயமா மேனிபெஸ்ட் பண்ணனும். நம்ம என்னவா வாழ்க்கையில் ஆக விரும்புறோம், நம்ம என்ன சாதிக்க விரும்புறோம், அப்படிங்கிறத நம்ம மேனிஃபெஸ்ட் பண்ணனும். நம்ம நம்பணும், ஆல்ரெடி அது நடந்துட்டா மாதிரி நம்ம நம்பணும். அதுக்காக கடுமையா உழைக்கணும். அப்ப நிச்சயமா யார் வேணா என்ன வேணா சாதிக்கலாம். அத மெடிடேட் பண்ணுங்க, வொர்க் அவுட் பண்ணுங்க. இதெல்லாம் வந்து உங்களுடைய இலக்குக்கு நீங்க சாதிக்க நினைக்கிற விஷயங்களுக்கு உங்களுக்கு சீக்கிரமா கூட்டிட்டு போகும். எனவோ, மேனிபெஸ்ட் பண்ணுங்க, கடினமா உழைங்க.
கருத்து சொல்றானேன்னு நினைக்காதீங்க. என் வாழ்க்கையில எனக்கு நடந்தது உங்களுக்கு சொல்றேன். கண்டிப்பா இதெல்லாம் நீங்க ஃபாலோ பண்ணுவீங்கன்னு நான் நம்புறேன். சத்யராஜ் சார் சொன்ன மாதிரி என்னுடைய ரசிகர்கள் யாரும் வம்புக்கும் போகமாட்டாங்க. அதுல எனக்குப் பெரிய கர்வமும் பெரிய சந்தோஷமும் இருக்கு.
இந்த இட்லி கடை, ரொம்ப ஒரு சிம்பிளான படம். ஒரு ஹம்பிளான படம். ஒரு சாதாரண படம். ஆனா உங்க ஃபேமிலியோட, உங்க குடும்பத்தோட, உங்க குழந்தைகளோட போய் ரசிச்சு எமோஷனலா என்ஜாய் பண்ற ஒரு படமா இருக்கும்னு நாங்க நம்புறோம். உங்களுக்கெல்லாம் இந்தப் படம் கண்டிப்பா பிடிக்கும்னு நாங்க நம்புறோம். அதே மாதிரி படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் காலை 9 மணிக்கு படம்னா, 8 மணிக்கே ஒரு சில ரிவ்யூ எல்லாம் வரும்.
அதெல்லாம் நம்பாதீங்க. 9:00 மணிக்கு படம் ரிலீஸ். ஆனா 12:30 மணிக்கு தான் படம் எப்படி இருக்குன்னே தெரியும். அதுக்கு முன்னாடியே நிறைய விமர்சனங்கள் வரும். அதெல்லாம் நீங்க நம்பாதீங்க. நீங்க படம் பார்த்து முடிவு பண்ணுங்க. உங்க நண்பர்கள் பார்த்திருப்பாங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்டு படம் பார்க்கறதா இல்லையான்னு முடிவு பண்ணுங்க. சினிமாக்கு அது இன்னைக்கு ரொம்ப தேவை. சினிமா ஆரோக்கியமா இருக்கணும். நிறைய படங்கள் நல்லபடியா ஓடணும். எல்லாருடைய படமும் ஓடணும். எல்லாத் தயாரிப்பாளர்களும் நல்லா இருக்கணும்.
சினிமா மட்டும் இல்ல. இன்னும் நிறைய பேர் இருக்காங்க. நிறைய தொழில் சினிமாவை நம்பி நடக்குது. அதனால எல்லா படங்களும் ஓடுறது ரொம்ப முக்கியம். அது உங்க கையில தான் இருக்கு. அதனால சரியான விமர்சனங்களைப் பார்த்து நீங்க முடிவு பண்ணுங்க, படம் எப்படி இருக்குன்னு. அப்படிங்கறது என்னுடைய கோரிக்கை.
வடசென்னை வருது கண்ணா அடுத்த வருஷம். அது ரொம்ப முக்கியமான விஷயம். மீண்டும் உங்களை எல்லாரையும் 10 வருஷம் கழிச்சு சந்திச்சதுல எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றி. ரொம்ப ரொம்ப நன்றி. வந்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. வாழ்த்துகள்" என்று தனுஷ் பேசினார்.
Idly Kadai | Dhanush | Idly Kadai Trailer | Idly Kadai Trailer Launch Event |