தனுஷின் ‘ராயன்’ டிரைலர் வெளியீடு! 
சினிமா

தனுஷின் ‘ராயன்’ டிரைலர் வெளியீடு!

வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் படம் போன்று தெரிகிறது.

யோகேஷ் குமார்

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தனுஷின் 50-வது படமான ராயன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உட்பட பலரும் நடித்துள்ளனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.

இப்படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியானது. இதில் ‘அடங்காத அசுரன்’ என்ற பாடலை தனுஷ் எழுதி, பாடியும் உள்ளார். ரஹ்மானும் இப்பாடலில் இணைந்து பாடியுள்ளார்.

இப்படம் ஜூலை 26-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

தனுஷின் வேடம் சற்று வித்தியாசமாக இருப்பதால், அவர் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலரின் காட்சிகளை பார்க்கும்போது வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு கேங்ஸ்டர் படம் போன்று தெரிகிறது.

இப்படத்தில் நான் வடசென்னையில் பிறந்து, அங்கே வாழ்ந்து, அங்கேயே மறையும் ஒரு பெண்ணாக நடித்துள்ளேன் என்று சமீபத்தில் துஷாரா விஜயன் பேசியிருந்தார்.