சினிமா

வட இந்தியாவில் வசூலைக் குவிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா!

3-வது நாள் முடிவில், உலகளவில் ரூ. 304 கோடி வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

யோகேஷ் குமார்

ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம், வட இந்தியாவில் அதிகமான வசூலைப் பெற்று வருகிறது.

இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் போன்றோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘தேவரா’. இசை - அனிருத்.

இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே அதிகமான வசூலை குவித்து வருகிறது. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3-வது நாள் முடிவில் உலகளவில் ரூ. 304 கோடி வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இப்படம் வட இந்தியாவில் அதிகமான வசூலைப் பெற்று வருகிறது. முதல் நாளில் ரூ. 7.95 கோடி, இரண்டாம் நாளில் ரூ. 9.5 கோடி என இதுவரை ரூ. 38.72 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் ரசிகர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.