ANI
சினிமா

தெலுங்குப் படத்தில் நடித்துள்ள டேவிட் வார்னர்: போஸ்டர் வெளியீடு!

தெலுங்குப் பாடல்களுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிட்ட காணொளிகள் இந்திய ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றன.

கிழக்கு நியூஸ்

ஆஸி. வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் முன்னாள் கேப்டனும் டேவிட் வார்னர், ராபின்ஹுட் என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா நடிக்கும் ராபின்ஹுட் என்கிற தெலுங்குப் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் ஆஸி. கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.

தெலுங்குப் பாடல்களுக்கு நடனமாடி சமூகவலைத்தளங்களில் இவர் வெளியிட்ட காணொளிகள் இந்திய ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றன. இதனால் இந்தியப் படங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ராபின்ஹுட் படத்தின் புதிய போஸ்டரில் வார்னர் இடம்பெற்றுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் மார்ச் 28-ல் வெளியாகிறது.