சினிமா

'தங்கல்' நட்சத்திரம் 19 வயது சுஹானி மறைவு!

அமீர் கானின் தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் உயிரிழந்தார். அவருக்கு வயது 19.

கிழக்கு நியூஸ்

அமீர் கானின் தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்நாகர் உயிரிழந்தார். அவருக்கு வயது 19.

2016-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஹிந்திப் படம் - தங்கல். இந்தப் படத்தில் ஆமிர் கானின் மகளாக நடித்திருந்தார் சுஹானி. பபிதா போஹத்தின் இள வயது கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார்.

கடந்த வருடம் விபத்தில் சிக்கிய சுஹானி இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவினால் சுஹானி உயிரிழந்துள்ளார். கஹானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆமிர் கானின் பட நிறுவனம் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளது.