தனுஷ்
தனுஷ் @sekharkammula
சினிமா

தனுஷ் 51: ஜனவரி 24-ல் தொடங்கும் படப்பிடிப்பு

யோகேஷ் குமார்

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 51-வது படம் ஜன.24 அன்று தொடங்குகிறது. இப்படத்தில் நாகார்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

அனாமிகா, ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. இவர் தனது அடுத்தப் படத்தை தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பலரை வைத்து இயக்கவுள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான‘கேப்டன் மில்லர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏற்கெனவே தனுஷ் டி50, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 24 அன்று தொடங்குகிறது.

இப்படத்தின் இசை - தேவி ஸ்ரீ பிரசாத்