நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியில் விஜய், ரஜினி படங்களை திரையிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வி.கே. புரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1700 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இப்பள்ளியில் விஜய் நடித்த கோட் படமும், ரஜினியின் வேட்டையன் படமும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
விஜய் படத்துக்காக 25 ரூபாயும், ரஜினி படத்துக்காக 10 ரூபாயும் கட்டணம் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், மாணவிகளிடம் பெற்ற பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் மாணவிகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே இப்படங்கள் ஒளிபரப்பப்பட்டதாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.