விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இதில் 18-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். 105 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில், வெற்றி பெறுபவருக்குக் கோப்பையுடன் பரிசுத் தொகையாக ரூ. 50 லட்சம் வழங்கப்படவுள்ளது. விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.
பிக் பாஸ் 9 அதிகாரபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் குறித்த தகவல் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி சின்னத்திரை, சினிமா மற்றும் சமூக ஊடகங்களிலிருந்து பிரபலங்கள், போட்டியாளர்களாக அழைக்கப்பட்டுள்ளார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கனி திரு, அஸ்வினி ஆனந்திதா, வினோத் பாபு, மாலினி ஜீவரத்தினம், பிரவீன் காந்தி, வாட்டர்மெலன் திவாகர், இர்பான் ஜயினி உள்ளிட்டோர் பிக் பாஸ் 9-ல் போட்டியாளர்களாகப் பங்கேற்கவுள்ளார்கள்.
பிக் பாஸ் 9 போட்டியாளர்கள்
மாடல் அப்சரா சிஜே
நடிகை அஸ்வினி ஆனந்திதா
மிஸ்டர் வேர்ல்ட் மணிகண்டன்
இயக்குநர் பிரவீன் காந்தி
’வாட்டர்மெலன்’ திவாகர்
நடிகை நேஹா மேனன்
பிக் பாஸ் 9 படப்பிடிப்பு இன்று (சனிக்கிழமை) தொடங்கியிருக்கும் என்பதால், போட்டியாளர்கள் அனைவரும் நேற்றிரவே படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று விஜய் சேதுபதி ஆய்வு செய்யும் காணொளி அதற்குள் இணையத்தில் கசிந்து வருகிறது.
Bigg Boss 9 | Bigg Boss 9 Contestants | Bigg Boss Contestants | Vijay Sethupathi |