https://x.com/AstroSehlvi
சினிமா

ரோபோ சங்கர் இறுதி ஊர்வலம்: ஜோதிடர் ஷெல்வி செய்த உதவி! | Robo Sankar |

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் சென்ற பிரம்மாண்ட வாகனத்தை ஏற்பாடு செய்ததாக தகவல்...

கிழக்கு நியூஸ்

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை ஜோதிடர் ஷெல்வி தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்ததாக ஆர்ஜே ரோஹினி தெரிவித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சமீபத்தில் மஞ்சள் காமாலை காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுக் காலமானார். அவரது மறைவுக்குத் திரைத்துறை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். சின்னத்திரை, வெள்ளித்திரை என ஏராளமான திரைப் பிரபலங்களுக்கு நெருக்கமாக இருந்தவர் ரோபோ சங்கர் என்பதால், பல்வேறு முக்கிய பிரபலங்கள், சென்னை வளசரவாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வளசரவாக்கம் மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக அவரது வீட்டில் இருந்து ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது அவரது மகள் இந்திரஜா அடித்துக்கொண்டு அழுத காட்சியும், தன் கணவருக்காகக் கடைசியாக ஆடி விடையனுப்பிய அவரது மனைவி பிரியங்காவின் நடனமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பிரபல ஜோதிடர் ஷெல்வி தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்தார் என்ற தகவலை சினிமா எக்ஸ்பிரஸைச் சேர்ந்த ஆர்ஜே ரோகினி தெரிவித்துள்ளா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் :- “நான், ரோபோ சங்கர், அவரது மனைவி, ஜோதிடர் ஷெல்வி போன்ற பலர் ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் 15 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இந்நிலையில் ரோபோவின் மறைவு பற்றிக் கேள்விப் பட்டதும் ஜோதிடர் ஷெல்வி நேரில் கலந்துகொண்டார். அப்போது அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்த வண்டி சாதாரணமாக இருந்ததால், அதை அனுப்பி வைத்துவிட்டு, தன் சொந்த செலவில் பிரம்மாண்டமான வண்டியை ஏற்பாடு செய்து உதவினார்.” என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.