சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விடைபெறுவதாக நடிகை அனுஷ்கா கைப்பட எழுதிய குறிப்பை வெளியிட்டுத் தெரிவித்துள்ளார்.
அருந்ததி, வானம், சிங்கம், பாகுபலி, பாகமதி உள்ளிட்ட படங்கள் மூலம் புகழ் பெற்றவர் நடிகை அனுஷ்கா. தெலுங்கு, தமிழ், கன்னடம் எனத் திரையுலகில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அனுஷ்காவின் ‘காட்டி’ (Ghaati) படம் அண்மையில் வெளியானது. வானம் பட இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, அனுஷ்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம், தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தான், நடிகை அனுஷ்கா சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விடைபெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அவர் கைப்பட எழுதி வெளியிட்டுள்ள குறிப்பில், ”நீல வெளிச்சத்தில் இருந்து விலகி நிலவு வெளிச்சத்திற்கான நேரம் இது. சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் வெளியேறுகிறேன். ஸ்கிராலிங் பணியை விலக்கிவிட்டு நிஜ உலகத்துடன் மீண்டும் இணையப்போகிறேன். மேலும் பல கதைகளுடனும் காதலுடனும் உங்களை நான் மீண்டும் விரைவில் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Anushka Shetty | Ghaati |