97-வது ஆஸ்கர் விருது விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை வென்றுள்ளது.
திரைத் துறையில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய நேரப்படி மார்ச் 3 அன்று நடைபெற்றது. 2024-ல் வெளியான படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் விருது வழங்கு விழா முதல்முறையாக ஜியோ ஹாட்ஸ்டாரில் காலை 5.30 மணி முதல் நேரலை செய்யப்பட்டது.
கடந்த ஆஸ்கரில் 7 விருதுகளை வென்று ‘ஒப்பன்ஹெய்மர்’ ஆதிக்கம் செலுத்தியது. இம்முறை அனுரா 5 விருதுகளை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 6 பிரிவுகளில் போட்டியிலிருந்த அனோரா 5 விருதுகளை வென்று குவித்துள்ளது.
அனோராவுக்கு அடுத்தபடியாக தி புரூட்டலிஸ்ட் 3 விருதுகளையும் விக்ட், எமிலியா பெரெஸ், டியூன் இரண்டாம் பாகம் தலா 2 விருதுகளையும் வென்றுள்ளன.
சிறந்த படம்: அனோரா (Anora)
சிறந்த இயக்குநர்: ஷான் பேக்கர் (அனோரா)
சிறந்த நடிகர்: ஏட்ரியன் ப்ரோடி (தி புரூட்டலிஸ்ட்)
சிறந்த நடிகை: மைக்கி மேடிசன் (அனோரா)
சிறந்த துணை நடிகர்: கிரன் குல்கன் (அ ரியல் பெய்ன்)
சிறந்த துணை நடிகை: ஸோயி சல்டானியா (எமிலியா பெரெஸ்)
சிறந்த அனிமேஷன் படம்: ஃப்ளோ (Flow)
சிறந்த அசல் திரைக்கதை: அனோரா (Anora) - ஷான் பேக்கர்
சிறந்த தழுவல் திரைக்கதை: கான்கிலேவ் (Conclave) - பீட்டர் ஸ்ட்ரான்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: டியூன் இரண்டாம் பாகம்
சிறந்த படத்தொகுப்பு: அனோரா (Anora)
சிறந்த ஆவணக் குறும்படம்: தி ஒன்லி கேர்ல் இன் தி ஆர்கெஸ்ட்ரா (The Only Girl in the Orchestra)
சிறந்த ஆவணப்படம்: நோ அதர் லாண்ட் (No Other Land)
சிறந்த ஒளிப்பதிவு: தி புரூட்டலிஸ்ட் (The Brutalist)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம்: ஐ எம் நாட் அ ரோபாட் (I'm Not a Robot)
சிறந்த அசல் பாடல்: எல் மால் (El Mal - Emilia Pérez)
சிறந்த அசல் இசை: தி புரூட்டலிஸ்ட் (The Brutalist)
சிறந்த ஒப்பனை: (தி சப்ஸ்டன்ஸ்) (The Substance)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: விக்ட் (Wicked)
சிறந்த ஆடை வடிவமைப்பு: விக்ட் (Wicked)
சிறந்த சர்வதேசத் திரைப்படம்: ஐ எம் ஸ்டில் ஹியர் (I'm Still Here) - பிரேசில்