ANI
சினிமா

அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை

ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை நடைபெற்றதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

கிழக்கு நியூஸ்

பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மும்பை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமிதாப் பச்சனுக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இன்று காலை ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை நடைபெற்றதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதுகுறித்து அமிதாப் பச்சன் தரப்பில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமிதாப் பச்சன் இன்று வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், எப்போதும் நன்றிக்குரியவனாக என்று எழுதியுள்ளார்.