சினிமா

ஹிந்தியில் வசூலை குவித்து சாதனை படைத்த புஷ்பா 2!

ஏற்கெனவே, இப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

யோகேஷ் குமார்

புஷ்பா 2 படம் இந்தியா முழுக்க வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் போன்ற பலர் நடித்த புஷ்பா 2 படம் நேற்று வெளியானது. இசை - தேவி ஸ்ரீ பிரசாத்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக, இப்படத்தின் ஹிந்திப் பதிப்பு முதல் நாளில் வரிகள் நீங்கலாக ரூ. 72 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல் நாளில் அதிக வசூல் செய்த ஹிந்திப் படம் எனும் சாதனையைப் படைத்துள்ளது ‘புஷ்பா 2’. முன்னதாக, ஷாருக் கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஜவான்’ படம் முதல் நாளில் ரூ. 65.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளது ‘புஷ்பா 2’. ஏற்கெனவே, இப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

மேலும், முதல் நாளில் உலகம் முழுக்க வரிகள் நீங்காமல் ரூ. 294 கோடி வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்தியப் படம் எனும் சாதனையையும் புஷ்பா 2 படைத்துள்ளது.