அஜித் @venusmotorcycletours
சினிமா

படப்பிடிப்பு முடிந்தவுடன் ரேஸிங் பணிகளைத் தொடங்கும் அஜித்!

ஐரோப்பியா ஜிடி4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவுள்ள நிலையில்..

யோகேஷ் குமார்

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன், அஜித் ரேஸிங் பணிகளைத் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியா ஜிடி4 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்கவுள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, 2004-ல் நடைபெற்ற ஃபார்முலா ஆசிய பிஎம்டபிள்யூ எஃப்3 சாம்பியன்ஷிப் மற்றும், 2010-ல் நடைபெற்ற ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் போட்டிகளில் அஜித் பங்கேற்றார்.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் அஜித் நடித்து வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முடித்தவுடன், அஜித் ரேஸிங் பணிகளைத் தொடங்கவுள்ளதாக வீனஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்த இன்ஸ்டாகிராம் பதிவில், “எங்கள் தலைமைச் செயல் அதிகார் அஜித், நாளை (நவ.24) குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் அஜித் ரேஸிங் அணியுடன் இணைந்து பார்சிலோனா செல்கிறார். அஜித் ரேஸிங் அணி நவ. 27 முதல் தங்களது பயிற்சியைத் தொடங்கவுள்ளது” என்று வீனஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.