சுனைனா @TheSunainaa
சினிமா

எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது: நடிகை சுனைனா

சுனைனா, சில நாள்களுக்கு முன்பு யாருடனோ கைக்கோர்த்து இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

யோகேஷ் குமார்

நடிகை சுனைனா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்.

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சமர், நீர்ப்பறவை, லத்தி போன்ற பல படங்களில் நடித்தவர் சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த இன்ஸ்பெக்டர் ரிஷி இணையத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சுனைனா சில நாள்களுக்கு முன்பு யாருடனோ கைக்கோர்த்து இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று, “எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், அந்த நபர் யார்? எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் போன்ற என்ற தகவலையும் அவர் வெளியிடவில்லை.

இது குறித்து சுனைனா கூறியதாவது: “எனது கடைசி பதிவு குறித்து சில செய்திகளைப் பார்தேன். இதனால் அதை தெளிவிப்படுத்த விரும்புகிறேன், எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. எனக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி” என்றார்.