பிரசன்னா 
சினிமா

அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது: பிரசன்னா

‘மங்காத்தா’ படத்தில் இருந்து அஜித்தின் ஒவ்வொரு படங்களிலும் நான் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது.

யோகேஷ் குமார்

‘குட் பேட் அக்லி’ படத்தில் தான் இணைந்துள்ளதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

பிரசன்னாவின் பதிவு

‘மங்காத்தா’ படத்தில் இருந்து அஜித்தின் ஒவ்வொரு படங்களிலும் நான் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல் நிறைய விஷயங்கள் நடந்தன. தற்போது ‘குட் பேட் அக்லி’ படம் மூலம் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. இதற்காக கடவுள், அஜித், ஆதிக், சுரேஷ் சந்திரா, மைத்ரி மூவிஸ் மற்றும் அஜித்தின் படத்தில் நான் நடிக்க வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. என்னால் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல முடியும், அஜித்தைப் பற்றி உங்களுக்கும், எனக்கும் என்ன தெரியுமோ, அதுதான் அவர். மிகவும் பணிவானவர்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.