பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் திருமணம் இன்று நடைபெற்றது.
ஆண்டனி தட்டில் என்பவரைக் கடந்த 15 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் இந்தக் காதல் மேலும் தொடரும் என்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் கோவாவில் உள்ள ரிசார்டில் நடைபெறவுள்ளதாகவும், இதில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளார்கள் என்றும் சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் காதல் திருமணம் கோவாவில் இன்று நடைபெற்றது. திருமணப் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.