ஜீவா 
சினிமா

மிஷ்கின், கௌதம் மேனனை கேலி செய்த ஜீவா!

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு நீளமான காட்சி இருக்கும், அதனை சற்று குறைத்திருக்கலாம்.

யோகேஷ் குமார்

முகமூடி படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் இழுவையாக இருந்ததாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

மாநகரம், மான்ஸ்டர், இறுகப்பற்று போன்ற படங்களைத் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள படம் ‘பிளாக்’.

இப்படத்தில் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - சாம் சி.எஸ்.

இது கிரைம் திரில்லர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அக்டோபர் 11 அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் கலாட்டா யூடியூப் சேனலின் நேர்காணலில் பேசிய ஜீவா, “முகமூடி படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் இழுவையாக இருப்பதாக மிஷ்கினிடம் கூறினேன். அதற்கு, என் படத்தை நீங்கள் எப்படி இவ்வாறு விமர்சிக்கலாம் என்று கேட்டார்.

அதேபோல் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் 7 நிமிடங்களுக்கு ஒரு நீளமான காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் எந்த விஷயத்தை சொல்ல வருகிறோமோ, அதேதான் படம் முழுவதும் இருக்கும். அதனால் அந்தக் காட்சியின் நீளத்தை குறைக்கலாம் என்று கௌதம் மேனனிடம் சொன்னேன். ஆனால், அந்தக் காட்சி நன்றாக இருக்கும் என்று கூறி கௌதம் மேனன் என்னை நடிக்க சொன்னார். அந்தக் காட்சி எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன், ஆனால் காட்சியின் நீளத்தை குறைத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.