சினிமா

செப். 20-ல் வெளியாகும் 8 தமிழ்ப் படங்கள்!

அக்டோபரில் வேட்டையன், அமரன் போன்ற பெரியப் படங்கள் வெளியாக உள்ளன.

யோகேஷ் குமார்

செப். 20 (வெள்ளி) அன்று 8 தமிழ்ப் படங்கள் வெளியாகவிருக்கின்றன.

கடந்த வாரம் விஜயின் கோட் படம் வெளியானது. இரு வாரங்களுக்கு கோட்டுக்கு போட்டியே இல்லை. இந்நிலையில் அடுத்த வாரம் செப்டம்பர் 20 அன்று ஒரே நாளில் 8 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.

பிரபல இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் யோகி பாபு, அறிமுக நடிகர் ஏகன் நடித்த ‘கோழிப் பண்ணை செல்லதுரை’

அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்த ‘லப்பர் பந்து’,

சசிகுமார் நடிப்பில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே படங்களை இயக்கிய இரா. சரவணனின் ‘நந்தன்’

ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’,

சதீஷ், வித்யா பிரதீப் நடித்த ‘சட்டம் என் கையில்’

காளி வெங்கட், விவேக் பிரசன்னா நடித்த ‘தோனிமா’,

சத்யராஜின் ‘தோழர் சேகுவேரா’

மற்றும் புதுமுகங்கள் நடித்த ‘தி கன்ஃபஷன்’ என ஒரே நாளில் செப். 20 அன்று 8 தமிழ்ப் படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன.