படம்: https://x.com/AKPPL_Official
சினிமா

ஆமிர் கான் படத்தில் 5 திருத்தங்கள்: தணிக்கை வாரியம் பரிந்துரை

"பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கோளைக் காட்ட வேண்டும்..."

கிழக்கு நியூஸ்

ஆமிர் கானின் சிதாரே ஸமீன் பர் படத்தில் 5 திருத்தங்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் மறுஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில் ஆமிர் கான் நடித்து தயாரித்துள்ள படம் சிதாரே ஸமீன் பர். இப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது. ஜெனிலியா இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தணிக்கை வாரியம் கடந்த செவ்வாய்கிழமை யு/ஏ 13+ சான்றிதழ் கொடுத்தது.

தணிக்கை வாரியம் தொடக்கத்தில் மாற்றங்களைப் பரிந்துரைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றங்களுக்கு ஆமிர் கான் ஆட்சேபனை தெரிவித்ததால், தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவுக்குப் படத்தை அனுப்பியுள்ளார். மறுஆய்வுக் குழு சிதாரே ஸமீன் பர் படத்தைப் பார்த்துவிட்டு, 5 திருத்தங்களை முன்வைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் ஹங்காமாவில் வெளியான செய்தியின்படி, மைக்கேல் ஜாக்சனை லவ்பேர்ட்ஸ் என மாற்ற வேண்டும், பிஸ்னஸ் வுமன் என்பதை பிஸ்னஸ் பெர்சன் என மாற்ற வேண்டும், தாமரை என்ற சொல்லை நீக்க வேண்டும், பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கோளைக் காட்ட வேண்டும், பொறுப்புத் துறப்பை மாற்ற வேண்டும் என 5 மாற்றங்கள் முன்வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் எனும் ஸ்பானிஷ் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள சிதாரே ஸமீன் பர், வெளியாவதற்கு முன்பே முன்பதிவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.