The Room Next Door 
சினிமா

சென்னை சர்வதேசப் படவிழா: படங்களின் அட்டவணை!

வெனிஸ் பட விழாவில் தி கோல்டன் லயன் விருதை வென்ற The Room Next Door படத்துடன் தொடங்கும் இப்படவிழா கேன்ஸ் பட விழாவில் விருது வென்ற Anora படத்துடன் நிறைவுபெறுகிறது.

கிழக்கு நியூஸ்

22-வது சென்னை சர்வதேசப் படவிழா டிசம்பர் 12 முதல் 19 வரை 8 நாள்களுக்கு நடைபெறுகிறது. சென்னை பிவிஆர் சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன. மொத்தம் 65 நாடுகளிலிருந்து 123 படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னை சர்வதேசப் படவிழாவில் 12 தமிழ்ப் படங்களும் 15 இதர இந்திய மொழிப் படங்களும் உலக சினிமா போட்டிப் பிரிவில் 10 படங்களும் போட்டியில்லாத பிரிவில் கேன்ஸ், பெர்லின், வெனிஸ் போன்ற சர்வதேச விழாக்களில் பங்கேற்ற படங்களும் திரையிடப்படவுள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், தமிழக அரசின் நிதியுதவியுடன் இப்படவிழாவை நடத்துகிறது.

வெனிஸ் பட விழாவில் தி கோல்டன் லயன் விருதை வென்ற The Room Next Door படத்துடன் தொடங்கும் இப்படவிழா கேன்ஸ் பட விழாவில் விருது வென்ற Anora படத்துடன் நிறைவுபெறுகிறது.

சென்னை திரைப்பட விழாவின் முழு அட்டவணை: