யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணம் உயர்வு! 
வணிகம்

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணம் உயர்வு!

விளம்பரமில்லா ஸ்ட்ரீமிங், ஆஃப்லைன் பதிவிறக்கங்கள் போன்ற வசதிகளை யூடியூப் ப்ரீமியம் சேவையின் மூலம் பெறலாம்.

யோகேஷ் குமார்

யூடியூப் ப்ரீமியம் சேவையின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

யூடியூப் ப்ரீமியம் சேவை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. விளம்பரமில்லா ஸ்ட்ரீமிங், ஆஃப்லைன் பதிவிறக்கங்கள் போன்ற வசதிகளை யூடியூப் ப்ரீமியம் சேவையின் மூலம் பெறலாம்.

இந்நிலையில் இச்சேவையின் கட்டணங்கள் 58 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, மாதம் ரூ.189-க்கு கிடைத்த ஃபேமிலி சேவையின் கட்டணம் தற்போது ரூ. 299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான மாதாந்திர சேவை ரூ. 79-லிருந்து ரூ. 89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தனிநபர் மாதாந்திர சேவை ரூ. 129-லிருந்து ரூ. 149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் தனிநபர் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் சேவைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.