முகேஷ் அம்பானி  
வணிகம்

ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் புதிய சலுகை அறிவிப்பு

தீபாவளி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

கிழக்கு நியூஸ்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 47-வது ஆண்டு பொதுக்கூட்டம் வியாழன் அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, செயற்கை நுண்ணறிவு குறித்த நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்களை விவரித்தார்.

இதன் பகுதியாக ஜியோ ஏஐ கிளௌட் வெல்கம் ஆஃபர் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த முன்னெடுப்பின் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கிளௌட் ஸ்டோரேஜில் 100 ஜிபி இலவசமாக வழங்கப்படும் என்றார். புகைப்படங்கள், வீடியோக்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பாதுகாத்து வைப்பதற்காக இது உதவும்.

தீபாவளி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

இது நடைமுறைக்கு வந்தவுடன் தங்களுடைய சொந்த தேவைக்காக மட்டுமின்றி ஜியோ அறிமுகப்படுத்தவுள்ள புதிய சேவைகளையும் ஏஐ கிளௌட் ஸ்பேஸுடன் இணைத்துக்கொள்ளலாம்.

ஜியோ டிவி ஆபரேடிங் சிஸ்டம், ஜியோ ஹோம், ஜியோ டிவி பிளஸ், ஜியோ போன்கால் ஏஐ உள்ளிட்டவற்றின் சேவைக்கும் ஏஐ கிளௌட் ஸ்பேஸ் பயன்படும்.

ஜியோ போன் கால் சேவையில், ஜியோ கிளௌடில் உள்ள தரவுகள் மூலம் அலைபேசி அழைப்புகள் அனைத்தையும் பயனாளர்கள் பதிவு செய்யவும், உரையாடலை எழுத்து வடிவில் மாற்றவும் உதவவுள்ளது.