வணிகம்

ஐபோனுக்கு இப்படி ஒரு தீவிர ரசிகரா?

ஐபோன் 16 சீரிஸ் விற்பனை இந்தியாவில் செப். 20 அன்று தொடங்கியது.

யோகேஷ் குமார்

மும்பையைச் சேர்ந்த உஜ்வால் என்பவர் 21 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ஆளாக ஐபோன் 16 சீரிஸ் போனை வாங்கியுள்ளார்.

ஐபோன் 16 (128 ஜிபி), ஐபோன் 16 பிளஸ் (128 ஜிபி), ஐபோன் 16 ப்ரோ (128 ஜிபி), ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி) என நான்கு மாடல்களை ஐபோன் 16 சீரிஸில் ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

இதன் விற்பனை இந்தியாவில் செப். 20 அன்று தொடங்கியது. இதற்காக செப். 19 இரவு முதலே மும்பை மற்றும் தில்லியில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிச் சென்றனர்.

இதில் உஜ்வால் என்பவர் 21 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ஆளாக ஐபோன் 16 சீரிஸ் போனை வாங்கியுள்ளார். இதற்காக இவர் அஹமதாபாதில் இருந்து மும்பைக்கு வந்தார்.

உஜ்வாலுக்கு இது முதல் அனுபவம் கிடையாது. கடந்த ஆண்டு ஐபோன் 15 போன் அறிமுகம் செய்யப்பட்ட சமையத்தில் 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ஆளாக அந்த போனை வாங்கினார்.

இந்நிலையில் இந்த ஆண்டும் நீண்ட நேரம் காத்திருந்து முதல் ஆளாக ஐபோனை வாங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ஐபோன் மீதான இவரது ஆர்வம் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.