படம்: https://x.com/JioHotstar
வணிகம்

ரூ. 10,006 கோடி வருவாய் ஈட்டிய ஜியோஹாட்ஸ்டார்: ரிலையன்ஸ் நிறுவனம்

ஜியோஸ்டார் ரூ. 229 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கிழக்கு நியூஸ்

ஜியோவுடன் இணைந்த பிறகு ஜியோஹாட்ஸ்டாருக்கு ரூ. 10,006 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இணைப்பு கடந்த நவம்பர் 14, 2024-ல் நடைபெற்றது. ஜியோஹாட்ஸ்டார் கடந்த பிப்ரவரி 14-ல் தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்ட முதல் 5 வாரங்களிலேயே 10 கோடி பேர் பணம் செலுத்தி சந்தாதாரர்கள் ஆகியுள்ளார்கள். 10 வாரங்களில் இது ஏறத்தாழ 28 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், கட்டணம் செலுத்திய சந்தாதாரர்களைக் கொண்டுள்ள தளங்களில் ஜியோஹாட்ஸ்டார் இரண்டாவது பெரிய தளமாக உருவெடுத்தது.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி 50.3 கோடி பேர் ஜியோஹாட்ஸ்டாரின் பயனர்களாக இருந்துள்ளார்கள். சாம்பியன்ஸ் கோப்பை, ஐபிஎல் போட்டிகள் உள்ளிட்டவை ஒளிபரப்பு செய்யப்பட்டதால் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்றின்போது ஒரே நேரத்தில் 6.12 கோடி பேர் ஜியோஹாட்ஸ்டாரை பயன்படுத்தியுள்ளார்கள். 2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்று ஆட்டத்தை விடவும் இந்தியா வென்ற 2025 சாம்பியன்ஸ் கோப்பை இறுதிச் சுற்று ஆட்டத்துக்குக் கிடைத்த ரேட்டிங் 23% அதிகமாக இருந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்மூலம், நடப்பு நிதியாண்டில் கடந்த நவம்பர் முதல் (ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இணைப்புக்குப் பிறகு) ஜியோஸ்டார் ரூ. 229 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகவும் ரூ. 10,006 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டு வணிக விவரங்கள்.pdf
Preview
ஜியோஹாட்ஸ்டாரின் சாதனைகள்.pdf
Preview