வணிகம்

தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்த தங்கத்தின் விலை!

இன்று கிராமுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்துள்ளது.

யோகேஷ் குமார்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் மதிப்பு நன்கு சரிந்தது. கடந்த தீபாவளியன்று அக்டோபர் 31-ல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,455 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், கடந்த நவ. 17 அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 6935 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு 60 ரூபாயும், சவரனுக்கு 480 ரூபாயும் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 6995-க்கு விற்பனையானது.

இதைத் தொடர்ந்து இன்று கிராமுக்கு 70 ரூபாயும், சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7065-க்கும், ஒரு சவரன் ரூ. 56520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.