வணிகம்

அதிரடியாக சரிந்த தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 135 ரூபாயும், சவரனுக்கு 1080 ரூபாயும் குறைந்துள்ளது.

யோகேஷ் குமார்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் மதிப்பு நன்கு உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த நவம்பர் 4 அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7370-க்கு விற்பனையானது.

இந்நிலையில் தங்கத்தின் விலை தற்போது அதிரடியாக சரிந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,080 குறைந்துள்ளது. எனவே, ஒரு சவரன் ரூ. 56680-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 7220-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு 135 ரூபாயும், சவரனுக்கு 1080 ரூபாயும் குறைந்து தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 56680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 7085-க்கு விற்பனையாகிறது.

சமீப நாட்களில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 3 சதவீதம் வரை குறைந்ததே, தங்கம் விலை குறைய ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

மேலும் பிட்காயினின் வர்த்தகம் ஏற்றமடைந்ததாலும், டாலர்களின் மதிப்பு உயர்ந்ததாலும் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை தங்கத்தின் மீது செலுத்த ஆர்வம் காட்டாமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்துள்ளது.