மத்திய பட்ஜெட் அறிவிப்பால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக சரிவைச் சந்தித்து வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கடந்த ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அவர் அறிவித்தார். இதனால் கடந்த மூன்று நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று (ஜூலை 24) ரூ. 51,920-க்கு விற்கப்பட்ட 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 480 குறைந்து, இன்று ரூ. 51,440-க்கு விற்கப்படுகிறது. மேலும் நேற்று ரூ. 6,490-க்கு விற்கப்பட்ட 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 60 ரூபாய் குறைந்து, இன்று ரூ. 6,430்-க்கு விற்கப்படுகிறது.
மேலும் நேற்று ரூ. 92,000 ஆக இருந்தது 1 கிலோ வெள்ளியின் விலை. இந்நிலையில் இன்று ரூ. 3,000 குறைந்து, 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 89,000 ஆக உள்ளது.
இதனால் யாரும் எதிர்பாராவிதமாக கடந்த 3 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 3,040 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அது போல, தங்க நகை விற்பனை அதிகரிக்கும் என்று நகை விற்பனையாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்