5ஜி சேவையில் களமிறங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்! @BSNLCorporate
வணிகம்

5ஜி சேவையில் களமிறங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம்!

முதற்கட்டமாக கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய இடத்தில் 5ஜி சிம் கார்ட் விற்பனையைத் தொடங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்.

யோகேஷ் குமார்

தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக 5ஜி சேவையில் களமிறங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

மொபைல் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்கள் கடந்த மாதம் அறிவித்தன.

இதன் மூலம் அடிப்படைத் திட்டத்தின் விலை முதல் வருடாந்திர திட்டத்தின் கட்டணம் வரை உயர்த்தப்பட்டது.

தனியார் நிறுவனங்களின் இந்த முடிவு மக்கள் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே குறைந்த விலையில் நிறைவான சேவையை வழங்கும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் மீது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனது 4ஜி சேவையை நாடு முழுக்க விரிவுபடுத்தி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

பிஎஸ்என்எல் 5ஜி சேவை திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல 5ஜி சேவையைப் பயன்படுத்தி அது வெற்றிகரமாக அமைந்ததாகத் தெரிவித்திருந்தார்.

எனவே, முதற்கட்டமாக கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய இடத்தில் 5ஜி சிம் கார்ட் விற்பனையைத் தொடங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்.