ரிசர்வ் வங்கி  
வணிகம்

ரூ. 7581 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை: ரிசர்வ் வங்கி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மே 19 அன்று அறிவிக்கப்பட்டது.

யோகேஷ் குமார்

ரூ. 7581 கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் புழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே 19 அன்று அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து 2023 அக்டோபர் 7-ம் தேதிக்குள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ-யின் கிளை அலுவலகத்தில் செலுத்தி, மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. தபால் வாயிலாகவும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது.

இந்நிலையில் ஒட்டுமொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் 97.87% வங்கிகளுக்குத் திரும்பிவிட்டதாகவும், ரூ. 7581 கோடி (2.1 சதவீதம்) மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.