ANI
வணிகம்

இந்தியா திரும்பிய 100 டன் தங்கம்!

கிழக்கு நியூஸ்

இங்கிலாந்து வங்கியிடம் இருந்து இந்திய அரசுக்குச் சொந்தமான 100 டன் தங்கம் 33 வருடங்கள் கழித்து இந்தியா கொண்டுவரப்பட்டது

கடந்த 1991 ஆம் வருடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்த காரணத்தால் தனக்குச் சொந்தமான 100 டன் தங்கத்தை இங்கிலாந்து வங்கியிடம் அடமானம் வைத்துக் கடன் வாங்கியது இந்திய அரசு. அதே வருடம் நவம்பர் மாதத்தில் இந்திய அரசு கடனைத் திரும்பச் செலுத்தியிருந்தாலும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக இத்தனை வருடங்கள் இங்கிலாந்து வங்கியின் பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்தது அந்த 100 டன் தங்கம்.

இந்திய அரசுக்குச் சொந்தமான 100 டன் தங்கம் கடந்த வாரம் நாடு திரும்பியதால் தற்போது ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டில் மொத்தம் 408 டன் தங்கம் இந்தியாவில் உள்ளது. இதுபோக இந்தியாவுக்குச் சொந்தமான 413 டன் தங்கம் இன்னும் வெளிநாடுகளில் உள்ள பெட்டகங்களில் சேமிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்னைகள் காரணமாக இந்தியா மீண்டும் தனது தங்கத்தை இங்கே கொண்டு வந்துவிட்டதாகச் சில ஊடகங்களில் வெளியான தகவல்களை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து அவ்வப்போது ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.