புத்தகம்

'மால்யத' நூலை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், இளையராஜா

கிழக்கு நியூஸ்

ஆண்டாளின் திருப்பாவையை விவரிக்கும் மால்யத என்கிற ஆங்கில நூலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டார்கள்.

ஜெயசுந்தர் எழுதி ஆக்ஸிஜன் புக்ஸ் பதிப்பித்துள்ள நூல் மால்யத. இந்த நூலானது ஆண்டாளின் திருப்பாவையை விவரிக்கிறது. பிரபல ஓவியர் கேஷவின் படங்கள் நூலை அலங்கரித்துள்ளன. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் விடுதியில் இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா, மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் மால்யத நூலை வெளியிட்டார்கள்.

நூல் வெளியீட்டுக்குப் பிறகு கிழக்குப் பதிப்பகம் நிறுவனர் பத்ரி சேஷாத்ரி, பிரபல ஓவியர் கேஷவ், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, இசைஞானி இளையராஜா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.